உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்ணாடி கேட்கும் கற்குடை அய்யனார்!

கண்ணாடி கேட்கும் கற்குடை அய்யனார்!

மேலூர் அருகே கொட்டகுடி கிராமத்தில் அமைந்துள்ளது  கற்குடைய அய்யனார் கோயில். ஆண்டு தோறும் ஐப்பசி மாத கடைசி செவ்வாய்  கிழமையில் இங்கு புரவி எடுப்பு திருவிழா கொண்டாடுவார்கள். இவ் விழாவில்  குழந்தைபாக்கியம், மழை பெய்து பூமி செழிக்கவும், நோய் நொடி  இல்லாமல் மக்கள் வாழவும் நேர்ந்து கொண்டு நேர்த்திக்கடனாக கண்ணாடியை செலுத்துவார்கள். கற்குடைய அய்யனாருக்கு, கண்ணாடி செலு த்தினால் வேண்டியது கொடுப்பார் என்பது ஐதீகம் என்பதால், கொட்டகுடி, மேலூர், கிளாதிரி, பூஞ்சுத்தி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த  பொதுமக்கள் கண்ணாடி செலுத்தி வருகின்றனர். இது தவிர வயல் வெளிகளில் நெற் கதிர்களை எலிகள் சேதப்படுத்துவதில் இருந்து தப்பிக்க எலி  சிலைகளும், விஷ ஜந்துக்கள் தொந்தரவில் இருந்து தப்பிக்க பாம்பு சிலைகளும், குழந்தை பாக்கியம் வேண்டி கொண்டவர்கள் வசதிக்கு தகுந்தாற்போல் பெரிய யானைகள் முதல் சிறிய பதுமைகள் வரை செலுத்தி வருகின்றனர். இக்கோவிலுக்கு மற்றொரு சிறப்பும் உண்டு - ஆங்கிலேயர் காலத்தில் இக் கோயிலில் யானை சிலையை கண்ட ஆங்கிலேய மன்னன் கல் யானை  கரும்பு சாப்பிடுமா என ஏளனமாக கேட்டார். அதற்கு பூஜாரி சாப்பிடும் என கூறவே, மன்னனும்  ஒரு வண்டி கரும்பை கொண்டு வந்து யானை முன் போட்டு திரையை கட்டினார். பூசாரியோ மனமுருகி வேண்டியதை தொடர்ந்து கற்சிலை கரும்பை சாப்பிட்டது என்பது ஐதீகம். எனவே இன்றும் இக்கோவிலில் உள்ள யானை சிலைக்கு விவசாயிகள் த ங்கள் வயலில் விளைந்த  கரும்புகளை படையல் இடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !