உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதி அம்மன் கோவிலில் 108 பால்குட ஊர்வலம்!

திரவுபதி அம்மன் கோவிலில் 108 பால்குட ஊர்வலம்!

கடலூர்: பழைய வண்டிப்பாளையம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி உற்சவத்தையொட்டி நேற்று 108 பால் குட ஊர்வலம் நடந்தது. கடலூர்,  பழைய வண்டிப்பாளையத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும்  மாலையில் பாரதம் படிக்கப்பட்டது. கடந்த 17ம் தேதி பக்காசூரனுக்கு சோறு போடுதலும், 18ம் தேதி அம்மன் திருக்கல்யாணம் உற்சவம் மற்றும்  பரிவேட்டையும், 19ம் தேதி கரக உற்சவமும் நடந்தது. நேற்று முன்தினம் தீ மிதி உற்சவத்தையொட்டி காலை 7:00 மணிக்கு அர்ச்சுனன் தபசு, மதியம்  12:00 மணிக்கு விராட பருவம் உற்சவமும், 1:00 மணிக்கு அரவான் குருஷேத்திர போருக்கு களபலிக்காக நகர் வலம் நடந்தது. தொடர்ந்து மாலை  3:00 மணிக்கு திரவுபதி அம்மன் வீரம்மாங்காளியாக உருவெடுத்து நகர் வலம் வந்தனர். பின்னர், கோவிலில் முன் அக்னி குண்டம் ஏற்றப்பட்டு,  மாலை 6:30 மணிக்கு சக்தி கரகத்துடன் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தக் கடனை செலுத்தினர். இரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது. இறுதிநாளான நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு 108 பக்தர்கள் பால்குடத்துடன் நகரை வலம் வந்து கோவிலை வந்தடைந்தனர். அம்மனுக்கு மகா அபிஷேகம்  மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் தர்மர் பட்டாபிஷேகம் மற்றும் மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !