உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அக்னி வசந்த திருவிழா: துரியோதனன், பீமன் வதம்!

அக்னி வசந்த திருவிழா: துரியோதனன், பீமன் வதம்!

ஆர்.கே.பேட்டை: அக்னி வசந்த திருவிழாவின் நிறைவு நாளான  நேற்று, துரியோதனனை, பீமன் வதம் செய்த காட்சி நடந்தது. ஆர்.கே.பேட்டை  அடுத்த,  செல்லாத்தூர் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா, கடந்த 5ம் தேதி, பாரத கொடியேற்றத்துடன் துவங்கியது. 9ம் தேதி, பகாசூரன்  கும்பம் நிகழ்ச்சியும், கடந்த திங்கட்கிழமை அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட மகாபாரத நிகழ்வுகள் நடந்து வந்தன. தினமும், பாரத சொற்பொழிவு, தெரு க்கூத்து நடத்தப்பட்டது. நேற்று காலை, 18ம் நாள் போர் நடந்தது. இதில், துரியோதனனை, பீமன் வென்றான். இந்த போர்க்கள காட்சியை காண  திரளான பக்தர்கள் குவிந்திருந்தனர். துரியோதனன் கொல்லப்பட்டதும், கோவில் வளாகத்தில் செய்யப்பட்டிருந்த பிரமாண்டமான துரியோதனன்  களிமண் சிலையை, பக்தர்கள் வதம் செய்தனர்.  மாலை 6:00 மணியளவில், தீமிதி திருவிழா நடந்தது. இதில், ஆர்.கே.பேட்டை, செல்லாத்தூர், கிரு ஷ்ணாகுப்பம், ஸ்ரீகிருஷ்ணாபுரம், வேலன்கண்டிகை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த, 1,000 பக்தர்கள், காப்பு கட்டி தீ மிதித்தனர். இன்று காலை,  தர்மருக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !