ராவுத்தநல்லூர் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா!
ADDED :4125 days ago
மூங்கில்துறைப்பட்டு: ராவுத்தநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா நடந்தது. மூங்கில்துறைப்பட்டு அடுத்த ராவுத்தநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா நடந்தது. இதையொட்டி பகல் 12:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணிக்குள் சுவாமிக்கு வடமாலை, வெற்றிலை மாலை, எலுமிச்சை பழ மாலை ஆகியவை அணிவித்தனர். தொடர்ந்து சுவாமிக்கு மகா திருமஞ்சன நிகழ்ச்சி, வெண்ணை காப்பு அலங்காரமும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.