பூலோகநாதர் கோவிலில் உழவாரப்பணி!
ADDED :4125 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம், பூலோகநாதர் கோவிலில் பண்ருட்டி, கொக்குபாளையம் அதிகைநாதன் இறைபணி மன்றத்தினர் உழவாரப்பணி மேற்கொண்டனர். கோவிலை சுற்றி இருந்த புதர்களை அகற்றினர். சுவாமி சிலைகள் மற்றும் கோபுரங்களை சுத்தம் செய்தனர். சீனுவாசன், பிரகாஷ், குகன், ராஜ்குமார், சந்திரசேகர், குமார் குருக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அமைப்பின் நிர்வாகி கூறுகையில், மாதத்தில் 30 நாட்களும் குடும்பத்துக்காக உழைக்கிறோம். ஒரு நாளாவது ஆண்டவனுக்காக உழைக்க முடிவு செய்து இப்பணியை செய்து வருகிறோம். கோவில்களில் உழவாரப்பணி செய்ய வேண்டுமானால் எங்களைதொடர்பு கொண்டால் எந்த செலவுமின்றி நாங்களே வந்து கோவிலை சுத்தம் செய்வோம் என கூறினர்.