மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் தேர்த்திருவிழா துவக்கம்!
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் புனித அந்தோணி யார் தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நிகழ்ச்சிக்கு, கோவை மறைமாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் தலைமை வகித்தார். பங்கு பாதிரியார் பால் சகாயராஜ், பாதிரியார் டான் போஸ்கோ திருப்பலியை நிறைவேற்றினர். முடிவில், புனித அந்தோணியார் உருவம் பொறித்த கொடியை, முதன்மை குரு ஏற்றி வைத்தார். ஏராளமான பங்கு மக்கள் பங்கேற்றனர். வரும் 26ம் தேதி, காலை 11.00 மணி, மாலை 5.00 மணிக்கு, சூலுார் சகாயமாதா ஜெபக்குழு நிர்வாகி ஜேசுதாஸ் அமாவாசை ஜெபம் செய்கிறார். மாலை 6.00 மணிக்கு கவுண்டம்பாளையம் பங்கு பாதிரியார் சைமன் பீட்டர், 27ம் தேதி காந்திபுரம் புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாதிரியார் பீட்டர் மரியதாஸ், 28ம் தேதி பாதிரியார் பால் சகாயராஜ் திருப்பலி, மறையுரை, நவநாள் ஜெபம் செய்கின்றனர். 29ம் தேதி காலை கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில், திருவிழா கூட்டுப்பாடற் திருப்பலி நடக்கிறது. அன்று மாலை 5.30 மணிக்கு திருப்பலி, மறையுரைக்கு பின், புனித அந்தோணியாரின் மின் அலங்கார ஆடம்பர தேர்பவனி நடைபெறுகிறது.