விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் தேவ நற்கருணை விழா
ADDED :4124 days ago
புதுச்சேரி : நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை ஆலயத்தில், தேவ நற்கருணை விழா கொண்டாடப்பட்டது. அதையொட்டி, மாலை 5:15 மணிக்கு சிறப்பு திருப்பலியும், பங்குதந்தை குழந்தைசாமி தலைமையில் தேவநற்கருணை பவனி நடந்தது. நெல்லித்தோப்பு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். நற்கருணை பவனி அருள்படையாச்சி வீதி, வினோபா வீதி, செயிண்ட் அந்துவான் வீதி, வில்லியனுார் ரோடு, மாதா கோவில் வழியாக மீண்டும் ஆலயத்தை அடைந்தது.உதவி பங்கு தந்தை ஜான்பால்ராஜ், அருட்தந்தையர்கள் மெல்கி மதக், அருள்புஷ்படம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.