உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பாளையம் கோவில்களில் ராகு - கேது பெயர்ச்சி பூஜை!

மேட்டுப்பாளையம் கோவில்களில் ராகு - கேது பெயர்ச்சி பூஜை!

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் கோவில்களில் ராகு-கேது பெயர்ச்சி விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, பரிகாரம் செய்தனர். ராகு பகவான், துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கும், கேது பகவான், மேஷ ராசியிலிருந்து மீன ராசிக்கும் இடம் பெயர்கிறார்கள். மேட்டுப்பாளையம் சிவன்புரம் ராஜ அஷ்ட விமோட்ஷன மகா கணபதி கோவில், ராகு, கேது பெயர்ச்சி விழா நடந்தது. விநாயகருக்கு வேள்வியும், ராகு கேதுக்கு சிறப்பு வேள்வியும் செய்யப்பட்டது. பரிகார பூஜைகள் நடந்தன. பின்பு சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜையும் செய்யப்பட்டது. மேட்டுப்பாளையம், சத்தியமூர்த்திநகர் நந்தவனம் அருகேவுள்ள மாதேஸ்வரர் கோவிலிலும், ராகு, கேது பெயர்ச்சி விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பூஜைகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !