கோவை தியானலிங்க கோவிலில் இன்று பிரதிஷ்டை தினம்!
ADDED :4122 days ago
கோவை ஈஷா யோக மையத்தில், தியானலிங்க யோக திருக்கோவிலின், 15வது ஆண்டு பிரதிஷ்டை தின விழா, இன்று நடக்கிறது. தியானலிங்க கருவறையில் காலை 6:00 மணிக்கு மஹா மந்திர உச்சாடனை துவங்குகிறது. நமசிவாய மந்திரத்தை தொடர்ந்து, சீக்கிய மதம், கிறிஸ்தவம், இஸ்லாம், சூபி வழிபாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஈஷா சமஸ்கிருதி மாணவர்களின் தேவாரப் பதிக பாடலும் நடக்கிறது. மாலை 5:30 மணியளவில் குருபூஜையுடன் கொண்டாட்டம் நிறைவு பெற்ற பின், சத்குருவின் தரிசனம் நிகழ்ச்சி 6:00 மணி முதல் 8:00 மணி வரை நடக்கிறது. பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.