உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யனார் உற்சவ மண்டப கும்பாபிஷேகம்!

அய்யனார் உற்சவ மண்டப கும்பாபிஷேகம்!

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே ஸ்ரீ பூர்ண புஷ்பகளா சமேத ஸ்ரீ அய்யனார் உற்சவ மண்டபத்திற்கு நேற்று நடந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பரங்கிப்பேட்டை அடுத்த தச்சக்காடு கிராமத்தில் உள்ள ஸ்ரீ பூர்ண புஷ்பகளா சமேத ஸ்ரீ அய்யனார் உற்சவ மண்டபத்திற்கு நேற்று கும்பிஷேகம் நடந்தது. அதையொட்டி நேற்று முன்தினம் அனுக்கை, விநாயகர் பூஜை, கிரஹபிரதி, வாஸ்துசாந்தி, முதல் கால சாலை ஹோமம் பூர்ணாஹூதி நடந்தது. கும்பாபிஷேகத்தினமான நேற்று இரண்டாம் கால யாக சாலை பூஜை ஹோமம், பூர்னாஹூதி சபர் சாகுதி மற்றும் காலை 9:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. 11 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !