புதுச்சேரி சாரதாம்பாள் கோவிலில் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம்!
ADDED :4122 days ago
எல்லைப்பிள்ளைச்சாவடி சாரதாம்பாள் கோவிலில் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் நடந்தது. புதுச்சேரி எல்லைப்பிள்ளைச்சாவடி சிருங்கேரி சிவகங்காபீடம் சாரதாம்பாள் கோவிலில், நேற்று முன்தினம் 22ம் தேதி முதல் வரும் 29ம் தேதி வரை, பரனூர் கிருஷ்ண பிரேமி சுவாமிகளின் மகன் ஸ்ரீஹரி அண்ணாவின் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு 7.00 மணிக்கு பரிஷத் சரித்ரம் என்ற தலைப்பில் உபன்யாசம் நடந்தது. நேற்று தஷயக்ஞம், துருவ சரித்ரம் என்ற தலைப்பில் உபன்யாசம் நிகழ்த்தப்பட்டது. தினம் இரவு 7.00 மணிக்கு பல்வேறு தலைப்புகளில் உபன்யாசம் நடக்கிறது. வரும் 29ம் தேதி காலை 2.30 மணியில் இருந்து மதியம் 12.30 மணி வரை உஞ்சவிருத்தி, திவ்யநாம பஜனை, ராதா கல்யாண மகோற்சவம் நடக்கிறது.