பாகூர் திரவுபதியம்மன் கோவிலில் தருமர் பட்டாபிஷேகம்!
ADDED :4123 days ago
பாகூர் திரவுபதியம்மன் கோவிலில், தருமர் பட்டாபிஷேகம் நடந்தது. பாகூர் திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 14ம் தேதி அரக்கு மாளிகை எளித்தல், 15ம் தேதி பக்காசூரன் வதம் செய்தல் 16ம் தேதி திரவுபதி-அர்ஜூனன் திருக்கல்யாண உற்சவம், 20ம் தேதி தீமிதி திருவிழா ஆகியவை நடந்தது. தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை 10.00 மணிக்கு, தருமர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வேல்முருகன், துணைத் தலைவர் அமிர்தலிங்கம், செயலாளர் தங்கராசு பொருளாளர் செந்தில்குமார் செய்திருந்தனர்.