உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரம்பலூர் ஷீரடி மதுரம் சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழா!

பெரம்பலூர் ஷீரடி மதுரம் சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழா!

பெரம்பலூர்: பெரம்பலூர் ஷீரடி மதுரம் சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
பெரம்பலூர் தீரன் நகரில், மூன்று கோடி ரூபாயில் ஷீரடி மதுரம் சாய்பாபா கோவில் கட்டப்பட்டு, சாய்பாபா முழு உருவ சிலை வைக்கப்பட்டுள்ளது. கோவில் கீழ்புறம், தியான மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவில், மகா கும்பாபிஷேக விழாவையொட்டி, கடந்த மே, 4ம்தேதி சிறப்பு பூஜை செய்யப்பட்டு பந்தகால் நடப்பட்டது. கும்பாபிஷேக விழா கடந்த, 18ம் தேதி கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. 19ம் தேதி பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலிருந்து முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. கடந்த, 20ம் தேதி யாகசாலை பூஜை தொடங்கியது.21ம்தேதி இரண்டாம் கால யாகபூஜையும், 22ம் தேதி காலை, 4ம் கால பூஜையும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து காலை, 9 மணியளவில் கலசங்கள் புறப்பாடும், 10 மணியளவில் விமான கோபுரம் மற்றும் மூல தேவர்களுக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது.பகல், 12 மணியளவில் மகா அபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி கடந்த, 18ம்தேதி முதல், 22ம்தேதி இரவு வரை அன்னதானம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !