உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேதாரண்யம் காசிவிஸ்வநாதர் கோவில் பந்தக்கால் மூகூர்த்த விழா!

வேதாரண்யம் காசிவிஸ்வநாதர் கோவில் பந்தக்கால் மூகூர்த்த விழா!

வேதாரண்யம்: காசிவிஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, யாகசாலை பந்தக்கால் மூகூர்த்த விழா நடந்தது.வேதாரண்யம், நாகை ரஸ்தாவில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த ஸ்தலம் ரிக், யூசூர், சம, அதர்வண வேதங்களால் பூஜிக்கப்பட்ட பெருமையுடைய ஸ்தலம்,இக்கோவிலின, 75 ஆண்டுகளுக்கு பின், ஜூலை, 14ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி, யாகசாலை பந்தக்கால் முகூர்த்த விழா, நேற்று காலை, 10 மணிக்கு நடந்தது. இதில், ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பைரவ சுந்தரகுருக்கள் தலைமையில் கலச பூஜையும் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !