திருப்பூர் வரும் ஜூலை 4ல்அய்யப்பன் கோவிலில் பிரதிஷ்டா தின விழா!
திருப்பூர்: திருப்பூர் அய்யப்பன்கோவிலில் பிரதிஷ்டா தின விழா,ஜூலை 4ல் நடக்கிறது. இதையொட்டி, 1,008 சகஸ்ரநாமஅபிஷேகம் நடைபெற உள்ளது.திருப்பூரில் உள்ள அய்யப்ப பக்தர்கள் இணைந்து, குமாரசாமி திருமண மண்டபத்தில், பஜனைநடத்தி வந்தனர். 1966ல், ஸ்ரீஐயப்ப பக்த ஜன சங்கம் என்றஅமைப்பை உருவாக்கி, காலேஜ்ரோட்டில் உள்ள இடத்தில்,பஜனை நடத்தி வந்தனர். சனிக்கிழமை தோறும் பஜனையும்,கார்த்திகை, மார்கழி மாத மண்டலபூஜை காலங்களில், தினமும் பஜனையும் நடந்து வந்தது. 1977ல்,அய்யப்பன் கோவில் அமைக்கப்பட்டது. அய்யப்பன் சிலை, தமிழகத்தில் உள்ள கோவில்களுக்குஎடுத்துச் செல்லப்பட்டு, வழிபாடுசெய்த பிறகு, இங்கு பிரதிஷ்டைசெய்யப்பட்டது. சிறிய அளவில்உருவான இக்கோவில், தற்போது,தங்கம், வெள்ளி, செம்பு,பித்தளை, வெண்கலம் என ஐம்பொன் கோவிலாக உள்ளது.மேலும், விநாயகர், மாளிகைபுரத்து அம்மன், முருகன், நவக்கிரங்கங்கள், நாகர் என பரிவாரசன்னதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.இக்கோவில் கும்பாபிஷேகம்நடந்த, ஜூலை 4ம் தேதி, பிரதிஷ்டா தின விழாவாக கொண்டாடப்படுகிறது. இப்பூஜை, 30ஆண்டுக்கு பிறகு, நடப்பாண்டுநடைபெற உள்ளது. வரும்ஜூலை 4ம் தேதி, காலை 5.00மணிக்கு மகா கணபதி ஹோமம்,6.50 மணிக்கு அனைத்து அபிஷேகமும் நடைபெற உள்ளது. காலை10.00 மணிக்கு, களபாபிஷேகம்,ஊர் நலன், செல்வ செழிப்பு,மக்கள் நலன் வேண்டி, 1,008 கலசசகஸ்ரநாம அபிஷேகம் நடைபெறும். பகல் 12.00 மணிக்கு,அன்னதானம், மாலை 6.00மணிக்கு, புஷ்பலங்காரம், 6.30மணிக்கு, மகா தீபாராதனை ஆகியன நடைபெறும். பிரதிஷ்டாதின விழா ஏற்பாடுகளை, கோவில்நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.