மயிலம் கோவில்களில் ஆனி கிருத்திகை வழிபாடு!
மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் ஆனி மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் கோவிலில் நேற்று கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை 6 மணிக்கு கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. காலை 11 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள பாலசித்தர், விநாயகர் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 12 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, மகாதீபாராதனை நடந்தது. மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பிற்பகல் ஒரு மணிக்கு கோவில் மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து படைத்தனர். இரவு 9 மணிக்கு உற்சவர் கிரிவலம் நடந்தது. விழா ஏற்பாடுகளை மயிலம் ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.அவலூர்பேட்டை மேல்மலையனூர் ஒன்றியம் கன்னலம் செல்வ முருகன் கோவிலில் ஆனி மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. வள்ளி, தெய்வானை சமேத செல்வமுருகனுக்கு காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.செஞ்சி செஞ்சி தாலுகா தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி கோவிலில் நேற்று கிருத்திகை வழிபாடு நடந்தது. தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜையும் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் செய்தனர். பூஜைகளை அருட்பெரும் ஜோதி குருக்கள் செய்தார்.