ஈஷாவில் தியானலிங்க பிரதிஷ்டை விழா!
ADDED :4126 days ago
பேரூர் : ஈஷா யோக மையத்தில், தியானலிங்க 15ம் ஆண்டு பிரதிஷ்டை விழா நடந்தது. கடந்த 1999ம் ஆண்டு, ஜூன் 24ம் தேதி, சத்குரு ஜக்கிவாசுதேவால் தியானலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து, 15ம் ஆண்டு பிரதிஷ்டை விழா, தியானலிங்க கருவறையில் நேற்று முன்தினம், ஈஷா பிரம்மச்சாரிகளின் மகா மந்திர உச்சாடனைகளுடன் துவங்கியது. நமச்சிவாயம் மந்திரத்தை தொடர்ந்து, பல்வேறு மத வழிபாடுகள் நடந்தன. ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களின் தேவார பதிகப்பாடலும், இசைக் கலைஞர்களின் நாத ஆராதனை நிகழ்ச்சியும் நடந்தது. மாலை குருபூஜையும், சத்குரு தரிசன நிகழ்ச்சியும் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.