சனிஸ்வர பகவான் கோவில் யானைக்கு நேற்றிப்பட்டம் அணிவிப்பு!
திருநள்ளார்: சனிஸ்வர பகவான் கோவில் யானைக்கு புதிதாக செய்யப்பட்ட நேற்றிப்பட்டம் பெறுத்தும் விழா நடந்தது. காரைக்கால் திருநள்ளாரில் உள்ள சனிஸ்வர பகவான் கோவிலில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு, நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இக்கோவிலு க்கு பிரமோற்சவ மற்றும் தேர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.கோவிலில் நடக்கும் விழாக்காலங்களில் சுவாமி புறப்பாடு முன்பு யானை ஊர்வலம் நடக்கும். கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் யானை பிரக்குருதிக்கு கேரளா மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள யானைகளுக்கு அமைக்கப்படும் நேற்றி பதக்கம் புதிதாக செய்யப்பட்டு அழகிய தேற்றத்தில் ரூ 80 ஆயிரம் மதிப்பில் 15 கிலோக்கொண்ட செம்புகலந்த தங்க பதக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக செய்யப்பட்ட நேற்றிப்பட்டத்திற்கு நேற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு.பின் யானை பிரக்கருதினுக்கு நேற்றிப் பட்டத்தை அமைக்கும் விழா நடந்தது. திருநள்ளார் கோவிலில் உள்ள முருகன், விநாயகர், சிவன், மற்றும் சனிஸ்வரன் பகவான் உள்ளிட்ட சுவாமிளை யானை பிரக்ககருதின் வழிப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜன் வீராசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.