உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிடாரியம்மன் கோவில் 4ம் தேதி கும்பாபிஷேகம்!

பிடாரியம்மன் கோவில் 4ம் தேதி கும்பாபிஷேகம்!

செஞ்சி: செஞ்சி தாலுகா மகாதேவி மங்கலம் கிராமத்தில் உள்ள பிடாரியம்மன், காளியம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து அடுத்த மாதம் 4ம் தேதி மகா கும்பாபிஷேகம் செய்ய உள்ளனர். 3ம் தேதி மாலை 4.30 மணிக்கு முதற்கால பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம், யாகசாலை பூஜைகளும், இரவு 9 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், யந்திர பிரதிஷ்டை நடக்கிறது. 4ம் தேதி காலை 6.30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை, தன பூஜை, தம்பதி பூஜை, மூல மந்திர ஜப பாராயணமும், 8.30 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 9 மணிக்கு கடம் புறப்பாடும் தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !