வைத்தீஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம்!
ADDED :4125 days ago
பொன்னேரி : கும்பாபிஷேகம் நிறைவு ஆண்டை முன்னிட்டு, வைத்தீஸ்வர பெருமானுக்கு, 108 சங்காபிஷேகம் நடந்தது.பொன்னேரி, சிங்கிலிமேடு கிராமம், தையல்நாயகி உடனுறை வைத்தீஸ்வரர் கோவில் உள்ளது. கடந்த, 2013ம் ஆண்டு, இத்திருத்தலத்தில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஓராண்டு முடிவடைந்த நிலையில், நேற்று வைத்தீஸ்வர பெருமானுக்கு, 108 சங்காபிஷேக விழா நடந்தது.முன்னதாக, பணியாத்தம்மன் ஆலயத்தில் இருந்து கலச குடம் கொண்டு வரப்பட்டு, வைத்தீஸ்வர பெருமானுக்கு அபிஷேகம் நடந்தது. பெண்கள், மாங்கல்ய பாக்கியம் வேண்டியும், திருமண தடை நீங்கவும் பூஜை மேற்கொண்டனர்.சங்காபிஷேக விழாவை முன்னிட்டு, வைத்தீஸ்வர பெருமானுக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.