உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகுடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: யாக சாலை அமைக்கும் பணி தீவிரம்!

மகுடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: யாக சாலை அமைக்கும் பணி தீவிரம்!

ஈரோடு: மகுடேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாக சாலை அமைக்கும் பணிகள், தீவிரமாக நடந்து வருகிறது.  கொடுமுடியில் வடிவுடைய நாயகிம்மன் உடனமர், மகுடேஸ்வரர் கோவில் உள்ளது. கடந்த, 1999 ஆகஸ்ட், 25ம் தேதி, கும்பாபிஷேகம்  நடந்தது. தற்போது திருப்பணிகள் நிறைவு பெற்று, கும்பாபிஷேகம் நடத்துவதற்கு, தயாரான பணிகள் நடந்த வருகிறது.வரும், ஏழாம் தேதி,  கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதையொட்டி, பல கோடி ரூபாய் மதிப்பிலான திருப்பணிகள், கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்தது.  பணிகள் நிறைவு பெறும் தருணத்தில் உள்ளது. இதையடுத்து, யாக சாலை பூஜை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. யாக  குண்டங்கள், 50, 16 வேதிகை மாடம், ஐந்து பஞ்சன வேதிகைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. நாகை மாவட்டம், திருக்கடையூர்  தாலுகா, காளியப்பநல்லூரை சேர்ந்த, ஆறு பேர், கடந்த, பத்து நாட்களாக யாக சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தவிர  லோக்கல் கொத்தனார்கள், பத்துப்பேர், வேலை செய்து வருகின்றனர். இப்பணிகள் வரும், 28ம் தேதியுடன் நிறைவு பெறும். அதன் பின்,  வர்ணம் தீட்டும் பணிகள் துவங்கும்.வெளியூர் பணியாளர்கள் ,கோவில் மண்டபத்தில் தங்கி இரவு, பகலாக பணியாற்றுகின்றனர். யாக  சாலை பணிக்காக, வெளியூரில் இருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். மணிமங்கலத்தை சேர்ந்த ஸ்தபதி மணிகண்டன்  தலைமையில், இப்பணிகள் நடக்கிறது. தவிர, தூண்களில் ஸ்பேரயர் மூலம், தண்ணீரை பீய்ச்சி அடித்து, சுத்தம் செய்யும் பணி, கதவுகளில்  புதிதாக பெயிண்ட் அடிக்கும் பணிகள் நடக்கிறது. தவிர சன்னதியில் ஆண், பெண் பக்தர்கள் நிற்க "ஸ்டீல் கைப்பிடிகள் புதிதாக தயார்  செய்யும் பணிகள் நடக்கிறது. மூன்று ராஜ கோபுரங்கள் உள்ளிட்ட, 14 கோபுரங்களில் வர்ணங்கள் பூசப்பட்டதுடன், கட்டைகள் கட்டி, தயார்  நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வரும், 30ம் தேதிக்குள் திருப்பணிகள் அனைத்தும் நிறைவு பெறும். அதன் பின் கும்பாபிஷேக ஏற்பாடுகள்  தீவிரமாக நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !