அங்காள பரமேஸ்வரிக்கு ஊஞ்சல் சேவை உற்சவம்!
ADDED :4128 days ago
விழுப்புரம்: அமாவாசையை முன்னிட்டு விழுப்புரம் அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழுப்புரம் நடராஜர் தெருவில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி பெரியாண்டவர் கோவிலில் அமாவாசையையொட்டி நேற்று முன்தினம் சாலை 6:30 மணிக்கு பரமேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு தீபாராதனை, 8:00 மணிக்கு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் சேவை நடந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்