திருப்பரங்குன்றம் கோயிலில் ஜூலை 2ல் ஊஞ்சல் திருவிழா!
ADDED :4452 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஊஞ்சல் திருவிழா ஜூலை 2ல் சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. திருவிழா நாட்களில் தினம் இரவு 7 மணிக்கு கோயில் திருவாட்சி மண்டப ஊஞ்சலில் சுவாமி, தெய்வானையுடன் எழுந்தருளி ஊஞ்சலாட்டம் நடக்கும். ஜூலை 11ல் மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஷ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை, உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு முக்கனிகள் படைத்து சிறப்பு பூஜை நடைபெறும்.