சித்தி விநாயகர் கோவில் கும்பாபிேஷகம்
ஆனைமலை: ஆனைமலை அடுத்துள்ள ஆழியாறு பகுதியில், வால்பாறை ரோட்டில், புதிதாக கட்டப்பட்ட சித்தி விநாயகர், கன்னிமார் கருப்பராயன் கோவிலின் மகா கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. நேற்றுமுன்தின ம் மாலை 5.30 மணிக்கு முதற்கால யாக பூஜையுடன் தொடங்கியது. நேற்று காலை 8.30 மணிக்கு தொடங்கிய இரண்டாம் கால பூஜையில், கலச பூஜை, தீபாராதனை மற்றும் கன்னிமார் கருப்பாரயனுக்கு விசேஷ பூஜைகள் நடந்தன. காலை 10.00 மணிக்கு நாடி சந்தனம், மகா கும்பாபிேஷகம், தீபாராதனை, தச தரிசனம், கோமாதா பூஜை நடத்தப்பட்டு பூஜை பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிேஷகத்தை ஆர்ஷ வித்யாபீடத்தை சேர்ந்த ததேவானந்த சுவாமிகள் நடத்தினார். இதையடுத்து, மகாஅன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை வேட்டைக்காரன் புதூர் ராகவேந்திரா மக்கள் இயக்கம் மற்றும் ஆழியாறு நகரை சேர்ந்த சுப்பிரமணியம் மற்றும் வேட்டைக்காரன் புதூரை சேர்ந்த சிவசாமி ஆகியோர் செய்திருந்தனர்.