உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனைத்து பள்ளி வாசல்களிலும் ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி!

அனைத்து பள்ளி வாசல்களிலும் ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி!

கோவை : கோவையிலுள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. கடந்த ஜூன் 28ம் தேதி சவ்வால் பிறை தெரியாததால், மீண்டும் நேற்று காலை 4.40 மணியிலிருந்து மாலை 6.51 மணி வரை உண்ணாமலும்,நீர் பருகாமலும் நோன்பு செய்யப்பட்டது. தொடர்ந்து, மாலை 6.51 மணிக்கு பேரிச்சம்பழம், தண்ணீர், நோன்பு கஞ்சி அளித்துநோன்பு திறக்கப்பட்டது. அனைத்து பள்ளிவாசல்களிலும் இட்லி, தோசை உணவாக வழங்கப்பட்டது. மீண்டும் 30 நாட்கள் கழித்து சவ்வால் பிறை பார்க்கப்படும். பள்ளி வாசல்களில் தினமும் இரவு சிறப்பு தொழுகைகள் நடத்தப்படுகிறது.இத்தகவலை, கோவை மாவட்ட அனைத்து ஜமா-அத் பொதுசெயலாளர் முகமது அலி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !