உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜர் கோவில் தெருவடைச்சான் ரதம் வீதி உலா!

சிதம்பரம் நடராஜர் கோவில் தெருவடைச்சான் ரதம் வீதி உலா!

சிதம்பரம்: நடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சனம் விழாவையொட்டி 5ம் உற்சவமான சுவாமி தெருவடைச்சான் சப்பரம் வீதி உலா காட்சி நடந்தது.  சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சனம் மகோற்சவம் கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி சிவகாமசுந்தரி  அம்மன் சமேத நடராஜர் சுவாமிக்கு தினம் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடக்கிறது. தினம் காலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடும்,  இரவு சபாநாயகர் சுவாமி புறப்பாடு செய்து வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். விழாவில் 5ம் நாள் உற்சவமான தெருவடைச்சான்  சப்பரம் வீதி உலா நேற்று நள்ளிரவு நடந்தது. இதில் சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, பஞ்சமூர்த்திகளுடன் கொட்டும் மழையில் நான்கு  ரதவீதிகளில் தெருவடைச்சான் உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சப்பரத்தை இழுத்து சென்றனர். இதனைதொடர்ந்து 3ம் ÷ ததி தேரோட்டமும், 4ம் தேதி மகா அபிஷேகம், நடராஜர் தரிசனம் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வ ருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !