உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பால முருகன், ஐயப்பன் கோவில்களில் மகா கும்பாபிஷேகம்!

பால முருகன், ஐயப்பன் கோவில்களில் மகா கும்பாபிஷேகம்!

மயிலம்: தென்பசியார் கிராமத்திலுள்ள  விநாயகர், பால முருகன், ஐயப்பன் கோவில்களில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.இதையொட்டி நேற்று முன்தினம்( 29ம் தேதி) பிற்பகல் 3.30 மணிக்கு விநாயகர் வழிபாடு, மாலை 4 மணிக்கு  முதற்கால வேள்ளி வழிபாடு, இரவு 9 மணிக்கு நாடி சந்தனம் நடந்தது.  நேற்று( 30ம் தேதி) காலை 7 மணிக்கு இரண்டாம் கால வேள்வி வழிபாடும், 9.40 மணிக்கு வேள்ளிசாலையிலிருந்து திருக்குடம் புறப்பாடு நடந்தது. காலை 9.56  மணிக்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞானபாலய சுவாமிகள்  கலசங்களுக்கு  புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். மாலை 6 மணிக்கு வள்ளி, தேவசேனா, பாலசுப்பிரமணியர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.  இரவு 10 மணிக்கு உற்சவர் வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !