சக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக பூர்த்தி விழா!
ADDED :4221 days ago
கடலூர்: கடலூர், பீச்ரோடு தீயணைப்புத் துறை வளாகத்தில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக பூர்த்தி விழா நடந்தது. இதனையொட்டி நேற்று முன்தினம் மாலை மகா அபிஷேகம், விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், அதிதேவதை காயத்ரி ஹோமம், பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து, கலச அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.