உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் கோவில் அன்னதானம் கூடங்களை உணவு அதிகாரி திடீர் ஆய்வு!

சிதம்பரம் கோவில் அன்னதானம் கூடங்களை உணவு அதிகாரி திடீர் ஆய்வு!

சிதம்பரம்: நடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சனம் உற்சவத்தையொட்டி அன்னதானம் செய்யும் இடங்களை உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர்  ராஜா அதிரடி ஆய்வு செய்தார். சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சனம் மகோற்சவத்தையொட்டி 3ம் தேதி தேரோட்டமும், 4ம் தேதி  நடராஜர் மகா அபிஷேகம் மற்றும் தரிசனம் உற்சவம் நடக்கிறது. இதனையொட்டி கடலுõர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ராஜா  தலைமையில் உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் பத்மநாபன், குணசேகரன் ஆகியோர் கொண்ட குழுவினர் சன்னதி தெருவில் உள்ள கடைகளில்  அதிரடியாக ஆய்வு செய்தனர். அப்போது சன்னதி தெரு கடைகளில் வைத்து விற்கப்பட்ட பீடி, சிகரெட் மற்றும் புகலையிலை பொருள்களை கைப் பற்றி அழித்தனர். இதனைதொடர்ந்து தேரோட்டம் மற்றும் தரிசனத்தின் போது அன்னதானம் வழங்குபவர்கள் அனுமதி பெற்று விநியோகம் செய்ய  வேண்டும் என்ற உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரி அன்னதானம் செய்யும் இடங்களை அதிரடியாக ஆய்வு செய்தார். சன்னதி தெரு வில் நவதாண்டவ தீட்சிதர் செய்து வரும் திருச்சிற்றம்பலம் அன்னதான அறக்கட்டளை சார்பில் தினம் அன்னதானம் செய்யும் இடத்தை நேரில்  சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் உணவு வகைளை ஆய்வு செய்து சுகாதாரமாக இருக்க வேண்டும் என ஆலோசனைகள் வழ ங்கினார். இதனால் கீழ வீதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !