உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாயூரநாதசுவாமி கோயில் ஆனிப் பெருந்திருவிழா நாளை துவக்கம்!

மாயூரநாதசுவாமி கோயில் ஆனிப் பெருந்திருவிழா நாளை துவக்கம்!

ராஜபாளையம்: ராஜபாளையம் பெத்தவநல்லூர் மாயூரநாதசுவாமி கோயில் ஆனிப்பெருந்திருவிழா, ஜூலை 2 (நாளை) காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனைதொடர்ந்து : 0 வரை பல்வேறு சமூகத்தினர் சார்பில் மண்டபகப்படி அமைத்து, சுவாமி மற்றும் அம்மன் வீதிஉலா நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்ச்சியாக, ஜூலை 8ல் இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. ஜூலை 10ல் காலை 10.30 மணிக்கு தேரோட்டம், அடுத்த நாள் காலை 6 மணிக்கு திருவாசகம் முற்றோதுதல் மற்றும் இரவு ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்மன் வீதிஉலா நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி அறிவழகன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !