கோவில் பூஜை பிரச்னை தீர்க்க மனு
ADDED :4121 days ago
நாமக்கல்: கோவில் பிரச்னையை, தீர்த்து வைக்கக்கோரி, என்.புதுப்பட்டி மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். நாமக்கல் அடுத்த, என்.புதுப்பட்டி, பள்ளர் தெருவைச் சேர்ந்த மக்கள் நேற்று, கலெக்டரிடம் அளித்த மனுவில், கூறியிருப்பதாவது: என்.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள பெரியகாண்டியம்மன் கோவிலுக்கு, 54 குடும்ப த்தைச் சேர்ந்த பங்காளிகள் உள்ளனர். அனைவரும் ஒன்று சேர்ந்து பூஜை செய்யலாம் என, மூன்று மாதங்களுக்கு முன் முடிவெடுக்கப்பட்டது.அதில், குறிப்பிட்ட சிலரை பூஜை செய்ய அழைக்கக் கூடாது என ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர். எனவே, கோவில் பூஜை முறையிலும், ஏற்கனவே செயல்பட்ட தர்மகர்த்தா முறையிலும், மாற்றம் செய்யாமல் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.