ராமேஸ்வரம் அந்தோணியார் சர்ச் விழா: கடல் பவனி
ADDED :4166 days ago
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் வேர்கோடு கடற்கரையில் உள்ள புனித அந்தோணியார் சர்ச் திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் மாலை, ராமேஸ்வரம் பாதிரியார் சகாயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. கடற்கரையில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விசைப்படகில் அந்தோணியார் எழுந்தருளி, கடலில் பவனி வந்தார். பூக்கள், மின் ஒளியில் அலங்கரிக்கப்பட்ட ஏராளமான படகுகள், அணிவகுத்து சென்றன. அன்றிரவு, தேர்பவனி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று காலை, சிறப்பு திருப்பலி முடிந்த பின் கொடியிறக்கத்துடன் விழா முடிவடைந்தது.