இருதய ஆண்டவர் பசிலிகாவில் தேர்பவனி!
ADDED :4120 days ago
புதுச்சேரி: இருதய ஆண்டவர் பசிலிகாவில் பெரிய தேர்பவனி நடந்தது. இருதய ஆண்டவர் பசிலிக்கா, ஆண்டு பெருவிழா, கடந்த மாதம் 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை, மாலை வேளையில் திருப்பலி, சிறிய தேர்பவனி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர பெரிய தேர் பவனி நேற்று முன்தினம் நடந்தது. காலை 7:30 மணிக்கு புதுச்சேரி கடலுார் பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. மாலை 6:30 மணிக்கு பெரிய தேர் பவனி நடந்தது. இந்நிகழ்ச்சியில் அன்பழகன் எம்.எல்.ஏ., அமலோற்பவம் பள்ளி முதல்வர் லுார்துசாமி, மரியஜோசப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.