உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உச்சிமாகாளியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

உச்சிமாகாளியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

உடுமலை : ராவணாபுரம் உச்சிமாகாளியம்மன் கோவில் கும்பாபிேஷகம் இன்று நடக்கிறது. உடுமலை, கொங்கல்நகரம் அருகே ராவணாபுரத்தில் உள்ள அரசமரத்தடி விநாயகர், சுந்தர விநாயகர் மற்றும் உச்சிமாகாளியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா, நேற்று இரவு 7.00 மணிக்கு, மகா கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. இரவு 7.15 முதல் இரவு 8.00 மணி வரை, பஞ்ச காவ்ய பூஜை, கோ பூஜை உள்ளிட்ட பூஜைகளும், சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, அலங்காரம், புஷ்பாஞ்சலி நடந்தது. இன்று அதிகாலை 4.00 மணி முதல் 6.00 மணிக்குள் மகா யாகம், கணபதி ேஹாமம், நாடி சந்தானம், 108 மூலிகை ேஹாமங்கள் நடக்கின்றன. காலை 6.30 மணிக்கு, கலசங்கள் யாக சாலையில் இருந்து புறப்பாடும், 6.45 மணிக்கு அரசமரத்தடி விநாயகர், சுந்தர விநாயகர் மற்றும் உச்சி மாகாளியம்மனுக்கு மகா கும்பாபிேஷகம் நடக்கிறது. காலை 7.15 மணிக்கு, சுவாமிகளுக்கு அபிேஷக, அலங்கார பூஜையும், காலை 9.00 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !