உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரையில் கோயில் தங்க விமானம் அமைப்பதில் முறைகேடு!

மதுரையில் கோயில் தங்க விமானம் அமைப்பதில் முறைகேடு!

மதுரை : மதுரையில் கோயில்களில் தங்க விமானம் அமைப்பதில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் புகார் மீது பதிலளிக்கும்படி, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை கமிஷனர், இணை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரை திருமோகூர் சீனிவாச ராகவன் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: காளமேகப்பெருமாள் கோயில் சக்கரத்தாழ்வார் சன்னதி, நரசிங்கம் யோக நரசிம்மர் கோயில் தங்க விமானங்கள் அமைக்க தங்கம் மற்றும் நிதி வசூலில் லட்சுமி நரசிம்ம ஆப்டன் ஹாங்க்ரிங் நிறுவனம் ஈடுபட்டது. இதற்கு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அனுமதி வழங்கவில்லை.தங்கம், நிதி வசூலில் முறைகேடு நடந்துள்ளது. இதில், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அதிகாரிகள் சிலருக்கு தொடர்புள்ளது. முறைகேடு குறித்து இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை கமிஷனர் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும், என கோரியிருந்தார்.இம்மனு நீதிபதிகள் ராமசுப்பிரமணியன், வேலுமணி முன் விசாரணைக்கு வந்தது. இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை கமிஷனர், இணை கமிஷனர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !