சிவகாசி சக்திமாரியம்மன் பொங்கல் விழா
ADDED :4283 days ago
சிவகாசி : சிவகாசி காமராஜர் ரோடு ஆயில்மில் காலனி சக்தி விநாயகர், சக்தி மாரியம்மன், சக்தி முனியசாமி கோயிலில் பொங்கல் விழா நடந்தது. அம்மனுக்கு அருள் கரகம் எடுத்தல், முளைப்பாரி கரைத்தல் நடந்தது. பக்தர்கள் பொங்கல் வைத்தும், முளைப்பாரி எடுத்து சுவாமியை வழிபட்டனர். இரவில் பட்டி மன்றம் நடைபெற்றது. ஏற்பாடுகளை சக்தி விநாயகர் சேவா சங்கத்தினர் செய்தனர்.