கிண்ணக்கொரை கிராமத்தில் தெவ்வப்பா திருவிழா!
ADDED :4118 days ago
மஞ்சூர் : கிண்ணக்கொரை கிராமத்தில் "தெவ்வப்பா திருவிழா நேற்று துவங்கியது. கிண்ணக்கொரை கிராமத்தில் அமைந்துள்ள ஹிரோடய்ய காடெஹெத்தை கோவிலில் ஆண்டு தோறும் "தெவ்வப்பா திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான திருவிழா நேற்று துவங்கியது. நேற்று "ஹிரோடைய்யா காடெஹெத்தை கோவிலில் அலங்கரிக்கப்பட்ட எத்தையம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. விழாவையொட்டி கிண்ணக்கொரை கிராமம் விழா கோலம் பூண்டுள்ளது. இந்த விழா வரும் வியாழன் நிறைவு பெறுகிறது.