திருப்பதிக்கு பக்தர்கள் பாத யாத்திரை!
ADDED :4118 days ago
முருக்கேரி: திண்டிவனம் அடுத்த எண்டியூர் வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் இருந்து திருப்பதிக்கு பக்தர்கள் நடைபாதை யாத்திரை சென்றனர். எண்டியூர் கிராமத்தை சேர்ந்த 150 பேர் திருப்பதி வெங்கடாஜல பெருமாளை தரிசனம் செய்ய கடந்த மாதம் மாலை அணிந்து விரதம் இருந்தனர். நேற்று காலை 10 மணிக்கு எண்டியூரில் உள்ள வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் அபிஷேக ,ஆராதனை செய்தனர். பக்தர்கள் பஜனைபாடி, திண்டிவனம் வழியாக நடைபாதை யாத்திரை சென்றனர்.