வெள்ளிமேடுபேட்டை கோவில் தீமிதி திருவிழா!
ADDED :4118 days ago
திண்டிவனம்: வெள்ளிமேடுபேட்டை திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது. திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுபேட்டை கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 2ம் தேதி இரவு 8 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 ம் தேதி முதல் சு.காட்டேரி சிவசுப்பராய அடிகளார் தினமும் மாலை மகாபாரத சொற்பொழிவும், கோபால் கவி வாசிப்பும் நடத்தி வருகிறார்கள். கீழ்சிவிரி ராமகிருஷ்ணன், கண்ணலம் பார்த்தீபன் குழுவினர் ஜூன் 20 ம் தேதி முதல் நேற்று வரை மகாபாரத நாடகம் நடத்தினர். நேற்று காலை 11 மணிக்கு துரியோதனன் படு களம் நிகழ்ச்சி நடந்தது. மாலை 6.30 மணிக்கு தீமிதி திரு விழா நடந்தது. இன்று காலை 9 மணிக்கு தருமர் பட்டா பிஷேகம் நடக்கிறது.