உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் சிவன் கோவிலில் டைல்ஸ் உடைப்பு!

விழுப்புரம் சிவன் கோவிலில் டைல்ஸ் உடைப்பு!

விழுப்புரம்: விழுப்புரம் கைலாசநாதர் கோவில் வளாகத்தில் டைல்ஸ் கற்களை அதிகாரிகள் உடைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம்   பிரகன்நாயகி சமேத கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை காலை 7:30 மணிக்கு மேல் 9:00 மணிக்குள் நடக்கிறது.  இதையொட்டி,   கடந்த 30ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா நிகழ்ச்சிகள் துவங்கியது. கோவில் வளாகத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் சன்னதி  உள் சுவற்றில்   பல நிறங்களில் (பக்தர் உபயத்தின் மூலம்) டைல்ஸ் பதிக்கப்பட்டன. கோவில் பாரம்பரிய கட்டட அமைப்பில் மாற்றம் செய்து, டைல்ஸ்   பதிக்கக்கூடாது. உடனடியாக அகற்ற அறநிலையத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.இந்து அறநிலையத்துறை இணை ஆணையரை சந்தித்த விழா   குழுவினர், ‘கும்பாபிஷேகம் முடிந்ததும், டைல்ஸ் அகற்றும் பணியை மேற்கொள்ளலாம்’ என கேட்டுக் கொண்டனர். இதனை ஏற்க மறுத்த இணை   ஆணையர் செந்தில்வேலன், கோவில் வளாகத்தில் பதித்துள்ள டைல்ஸ்களை உடன்  அகற்ற செயல்அலுவலர் முத்துலட்சுமிக்கு உத்தரவிட்டார்.   செயல் அலுவலர் முத்துலட்சுமி மேற்பார்வையில், கோவில் தக்கார் கவியரசு, கணக்கர் பேராதரன் முன்னிலையில் நேற்று மதியம் 2:30 மணியளவில்   பெரியநாயகி அம்மன் சன்னதியில் இருந்த புதிய டைல்ஸ்கள் உடைக்கும் பணி துவங்கியது. இந்து முன்னனி நகர தலைவர் ராமு, நகர் மன்ற   கவுன்சிலர் ஹம்முருண்ணிசா சண்முகம், முன்னாள் கவுன்சிலர் தனுசு மற்றும் மக்கள் திரண்டு வந்து, டைல்ஸ் அகற்றும் பணிக்கு எதிர்ப்பு   தெரிவித்தனர். கோவிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கிய நிலையில், டைல்ஸ் இடிக்கும் பணியை நிறுத்த வலியுறுத்தினர். இதையடுத்து டைல்ஸ்   இடித்து அகற்றும் பணி தற்காலிகமாக கைவிடப்பட்டது.  இச்சம்பவத்தால் கோவில் வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !