பெரிய பாளையத்தம்மன் கோவிலில் செடல் திருவிழா!
ADDED :4118 days ago
நெட்டப்பாக்கம்: எல்.ஆர்.பாளையம் பெரிய பாளையத்தம்மன் கோவிலில் செடல் திருவிழா நடந்தது. கண்டமங்கலம் ஓன்றியத்திற்குட்பட்ட எல்.ஆர்.பாளையம் கிராமத்தில் உள்ள பெரியபாளையத்தம்மன் கோவில் செடல் உற்சவம், கடந்த 27 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று பகல் 12.00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் செடல் உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அலகு குத்தி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.நேற்று மாலை கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 9.00 மணிக்கு முத்துப் பல்லக்கு வீதியுலா நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.