உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரம்!

விநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரம்!

முதுநகர்: விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக முதுநகர் பகுதிகளில் விநாயகர் சிலைகள் செய்யும் பணி சூடுபிடித்துள்ளன. இந்த ஆண்டு விநாயகர்   சதுர்த்தி விழா ஆகஸ்ட் 29ம் தேதி  வருகிறது. அதனையொட்டி கடலூர், முதுநகர் பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய அளவிலான   விநாயகர் சிலைகள் செய்யும் பணி நடந்து வருகின்றன. இதுகுறித்து  மணவெளியைச் சேர்ந்த சங்கர் கூறுகையில், ‘விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி,   கிறிஸ்துமஸ் விழாக்களின் போது சிலைகள் செய்து விற்பனை செய்து வருகிறோம்.  விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி கடந்த 2 மாத  ங்களாகவே சிலைகள் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். 3 அடி முதல் 12 அடி வரை வரையிலான உயரத்தில் பல்வேறு வகை விநாயகர் சிலைகள்  தயார் செய்து வருகிறோம். 1,500 ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை உள்ள இந்த சிலைகள் விற்பனைக்காக திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம்   மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !