வரதராஜப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா துவக்கம்!
ADDED :4119 days ago
கடலூர்: கடலூர், வரதராஜப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா சிறப்பு பூஜையுடன் நேற்று துவங்கியது. கடலூர், திருப்பாதிரிப்புலியூரில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா இன்று முதல் வரும் 9ம் தேதி வரை நடக்கிறது. அதனையொட்டி நேற்று காலை மூலவரு க்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மிருத்சங்கரஹணம், வாஸ்து சாந்தி, கருட துவஜ பிரதிஷ்டையை தொடர்ந்து அங்குரார்ப் பணம் நடந்தது. இன்று காலை 8:00 மணிக்கு கொடியேற்றத்தைத் தொடர்ந்து உபநாச்சியாருடன் வீதியுலா நடக்கிறது. தொடர்ந்து தினமும் காலை மற்றும் இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. வரும் 7ம் தேதி காலை பல்லக்கு நாச்சியார் திருக்கோலம் மற்றும் ஊஞ்சல் சேவையும், இரவு தங்க கருட வாகன மகோற்சவம் நடக்கிறது. 8ம் தேதி துவாதச ஆராதனை விழாவும், 9ம் தேதி விடையாற்றி உற்சவமும் நடக்கிறது.