உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாதானுார் கோவிலில் 9ம் தேதி திருக்கல்யாணம்!

வாதானுார் கோவிலில் 9ம் தேதி திருக்கல்யாணம்!

புதுச்சேரி: வாதானுார், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், வரும் 9ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. வாதானுார், மீனாட்சி சுந்த÷  ரஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், வரும் 9ம் தேதியன்று, காலை 9:00 மணியில் இருந்து, 10:30 மணிக்குள்,  மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு   திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. முன்னதாக காலை 6:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 9:00 மணிக்கு சீர்வரிசை கொண்டு வருதலும்   நடக்கிறது.அதைத்தொடர்ந்து, பகலில் அன்னதானம் வழங்கப்படுகிறது.  மீனாட்சி சுந்தரேஸ்வரர்– மீனாட்சி சிறப்பு அலங்காரத்தில், இரவு வீதி   உலா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, தனி அதிகாரி ராஜேந்திரன் மற்றும் கிராம நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !