உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுப்பொலிவு பெறும் குன்றத்து தேர்கள்!

புதுப்பொலிவு பெறும் குன்றத்து தேர்கள்!

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான இரு வைரத்தேர்களை புதுப்பிக்கும் பணி நடக்கிறது. கோயில்  முன்பு 24 அடி உயரம் மற்றும் அகலம், 40 டன் எடை கொண்ட பெரிய வைரத் தேரும், 16 கால் மண்டபம் முன்பு 10 அடி உயரம் மற்றும் அகலம், 10  டன் எடை கொண்ட சிறிய வைரத் தேரும் நிறுத்தப்பட்டுள்ளன. பங்குனி விழா திருக்கல்யாணம் முடிந்து மறுநாள், சுப்பிரமணிய சுவாமி, தெய் வானை, பெரிய வைரத் தேரில் எழுந்தருள தேரோட்டம் நடக்கும். கார்த்திகை தீப திருவிழா மற்றும் தெப்பத் திருவிழாவின்போது சிறிய வைரத் ÷ தரில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி ரத வீதிகளில் தேரோட்டம் நடக்கும். பழமைவாய்ந்த இரு தேர்களையும் சீரமைக்க கோயில்  நிர்வாகம் முடிவு செய்தது. பராமரிப்பு பணி துவங்கியுள்ளது. சிறிய தேர் பராமரிப்பு பணி முடியும் நிலையில் உள்ளது. பெரிய வைரத்தேரில் படிந் துள்ள துாசுகளை நீக்கும் பணி நடக்கிறது. துணை கமிஷனர் பச்சையப்பன், முதற்கட்டமாக ஏழுரை லட்சம் ரூபாயில் உபயதாரர்மூலம் பணிகள்  துவக்கப்பட்டுள்ளன. துாசுகள் அகற்றப்பட்ட பின் தான் பழுதடைந்துள்ள பாகங்கள் விபரம் அறிய முடியும். சீரமைக்கப்பட வேண்டிய பாகங்கள்  குறித்து மதிப்பீடு தயாரித்து, பின் உபயதாரர்மூலம் மராமத்து பணிகள் முடிந்து சிற்பங்களை பாதுகாக்க வார்னீஷ் அடிக்கப்படும். தேருக்கு கண்ணாடி  கூண்டு அமைக்கப்படும்,சு என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !