உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வினோபா நகரில் யாகசாலை பூஜை!

வினோபா நகரில் யாகசாலை பூஜை!

புதுச்சேரி:  முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள் நேற்று துவங்கியது. வினோபா நகர், முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிகள் நிறைவடைந்து, மகா கும்பாபிஷேகம், நாளை காலை 9:00 மணிக்கு மேல், 10.30 மணிக்குள் நடக்கிறது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள், விக்னேஸ்வர பூஜையுடன் நேற்று காலை துவங்கியது.கணபதி ஹோமம், தனலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், தன பூஜை, கோபூஜை நேற்று காலை நடந்தது. முதல்கால பூஜையும், விசேஷ ஹோமமும் மாலையில் நடந்தது. இரண்டாவது, மூன்றாவது கால பூஜைகள் இன்று நிறைவடைந்து, மகா கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.விழா ஏற்பாடுகளை, திருப்பணி குழுவினரும், ஊர் மக்களும் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !