சிவலோகநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா
ADDED :4119 days ago
கிணத்துக்கடவு : சிவலோகநாதர் கோவிலில், வரும் 4ம் தேதி ஆனி திருமஞ்சனத்தை ஒட்டி நடராஜருக்கு சிறப்பு அபிசேக அலங்கார பூஜைகள் நடத்தப்படுகின்றன. சிவலோகநாதர் கோவிலில், வரும் 4ம் தேதி ஆனி திருமஞ்சனத்தை ஒட்டி பிற்பகல் 2.00 மணிக்கு கலசம் வைத்து வேள்வி பூஜை நடக்கிறது. பின், மாலை 5.00 மணிக்கு நடராஜர் சிலைக்கு பால், பன்னீர், தேன், தயிர், இளநீர், எலுமிச்சை, அரிசி மாவு, சந்தனம், குங்குமம் போன்றவைகளால் சிறப்பு அபிசேகமும், அதனை தொடர்ந்து வேள்வியில் வைக்கப்பட்ட கலச நீரை ஊற்றி, சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. தொடர்ந்து, நடராஜர் சப்பரத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பின், பக்தர்களுக்கு, பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது.