உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விபூதீஸ்வரர் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம்

விபூதீஸ்வரர் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம்

வெண்மணம்புதுார் : வெண்மணம்புதுார், சுகுந்த குந்தலம்பாள் உடனுறை விபூதீஸ்வரர் கோவிலில், நாளை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கடம்பத்துார் ஊராட்சிக்குட்பட்ட, வெண்மணம் புதுாரில், சுகுந்த குந்தலம்பாள் உடனுறை விபூதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் புனரமைக்கப்பட்டு, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா, நாளை, காலை 9:30 மணிக்கு, நடைபெற உள்ளது.முன்னதாக, கடந்த மாதம், 22ம் தேதி, பந்தக்கால் விழா நடந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு, கணபதி ஹோமமும், லட்சுமி பூஜையும் பூர்ணாஹூதி தீபாராதனையும் நடந்தது. மாலை, 5:30 மணிக்கு, பிரவேச கும்ப அலங்காரமும், முதல் கால யாகசாலை பூஜையும் நடந்தது.இன்று காலை, 9:00 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை, 5:30 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும், நாடி சந்தானம் தத்துவார்ச்சனையும் நடைபெறும். நாளை காலை, 6:30 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜையும், மகா பூர்ணாஹூதி தீபாராதனையும் நடைபெறும். அதன்பின், காலை, 9:30 மணிக்கு கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகமும், அதன்பின், அனைத்து மூர்த்தங்களுக்கும் கும்பாபிஷேக தீபாராதனையும், தீர்த்த வினியோகமும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !