உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீனிவாச பெருமாள் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்

சீனிவாச பெருமாள் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்

புதுவள்ளூர் : புதுவள்ளூர் சீனிவாச பெருமாள் கோவிலில், நேற்று, மகா சம்ப்ரோக்ஷணம் நடந்தது. கடம்பத்துார் ஒன்றியம், பாப்பரம்பாக்கம் அருகே உள்ள புதுவள்ளூரில், ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில், நேற்று காலை, 10:30 மணிக்கு, அஷ்டபந்தன மகா சம்ப்ரோக்ஷணம் நடந்தது.முன்னதாக, நேற்று முன்தினம், காலை, 8:00 மணிக்கு, கால சாந்தி பூஜைகளும், காலை, 11:00 மணிக்கு, மகா சாந்தி ஹோமமும், உற்சவர் திருமஞ்சனம் விமான அதிவாச ஹோமமும், அதன்பின் காலை, 12:00 மணிக்கு மகா பூர்ணாஹூதியும் நடந்தது.நேற்று, காலை 7:00 மணிக்கு, சுப்ரபாதம் காலசாந்தி பூஜையும், அதன்பின் மகா பூர்ணாஹூதியும் நடந்தது. காலை 10:30 மணிக்கு, கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மகா சம்ப்ரோக்ஷணம் நடந்தது. அதன்பின், கோவில் மூலஸ்தானத்திற்குமகா பிரதிஷ்டை திருக்கல்யாண தீபாராதனையும், இரவு, 8:00 மணிக்கு, சீனிவாச பெருமாள் திருவீதி உலா நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !