சிவ சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் ஆனி திருமஞ்சனம்
தர்மபுரி: தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவ சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், ஆனி திருமஞ்சனம் சிறப்பு பூஜை, நாளை நடக்கிறது. காலையில், நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலையில், ஸ்வாமி திருவீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் மற்றும் செங்குந்த சிவனேய செல்வர்கள் செய்துள்ளனர்.
* நெசவாளர் காலனி மகாலிங்கேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடக்கிறது. பக்தர்களுக்கு, பிரசாதம் வழங்கப்படுகிறது.
* தர்மபுரி அன்னசாகரம் சிவசுப்பிரமணிய ஸ்வாமி ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.